'சூர்யா 47' படத்தை இயக்கும் `ஆவேஷம்' இயக்குநர் - பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு

இப்படத்தில் பிரேமலு ஹீரோ நஸ்லேன் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Suriya 47 begins shooting with director Jithu Madhavan alongside Nazriya and Naslen
Published on

சென்னை,

சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது 47வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. `ஆவேஷம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இந்தப் படத்தை இயக்குகிறார். இத்னால், எதிர்பார்ப்புகள் ஏற்கனவே விண்ணை எட்டியுள்ளன.

இப்படத்தில் சூர்யாவுடன், பிரேமலு ஹீரோ நஸ்லேன் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

`ஆவேஷம்' போன்ற ஒரு மாஸ் எனர்ஜியான படத்திற்குப் பிறகு இப்படத்தை இயக்கும் ஜித்து மாதவன்,  சூர்யாவை எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் காட்டப்போகிறார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆவலுடன் காத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com