

சூர்யாவின் 48-வது படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.
சூர்யா நடித்திருந்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான அப்படத்திற்கு வசூல் ரீதியான நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து சூர்யாவின் 46-ஆவது படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. சூர்யாவின் 47-ஆவது படத்தை, 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கிவருகிறார்.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள இப்படத்தை தயாரிக்க உள்ளதாக ஹோம்பாலே நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. ‘கருப்பு’ படத்தைத் தொடர்ந்து சாய் அபயங்கர், சூர்யாவின் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். கயாடு லோஹர் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஜெய் பீம்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பதால், ரசிகர்களிடம் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே பிலிம்ஸ். கே.ஜி.எப், சலார், காந்தாரா என இந்தி அளவில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
சூர்யாவின் 48-வது படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இதில் பேசிய தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், “வணிக வெற்றியையும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒருசேரப் பெறும் அசாத்திய திறமை கொண்டவர் சூர்யா. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களைக் கொண்டாடும் சூர்யா மற்றும் அழுத்தமான கதைகளை செதுக்கும் த.செ.ஞானவேல் ஆகிய இருவரையும் எங்களது ஹொம்பாலே குடும்பத்திற்கு வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த படத்தில் 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்று பேசினார்.
நடிகை கயாது லோகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இத்திரைப்படம் பான் இந்தி திரைப்படமாக தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜூலை மாதம் 22-ஆம் தேதி முதல் விறுவிறுப்பாகத் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.