நேருக்கு நேர் மோதும் சூர்யா - நயன்தாரா... ஒரே நாளில் வெளியாகும் படங்கள்

இரு பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா
Published on

சென்னை,

ஒரே நாளில் சூர்யா மற்றும் நயன்தாரா நடித்த படங்கள் வெளியாக உள்ளன.

பாக்ஸ் ஆபீஸ் மோதல்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான சூர்யா மற்றும் நயன்தாரா, திரையரங்குகளில் நேரடியாக பாக்ஸ் ஆபீஸில் மோதவுள்ளனர். இருவரும் இணைந்து 'கஜினி', 'ஆதவன்', 'மாசு என்கிற மாசிலாமணி’ ஆகிய படங்களில் நடித்திருந்தநிலையில், தற்போது வெவ்வேறு படங்களுடன் ரசிகர்களை சந்திக்க உள்ளனர்.

'விஸ்வநாத் & சன்ஸ்'

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' மற்றும் நயன்தாரா நடித்துள்ள 'ஹாய் ஆகிய திரைப்படங்கள், வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி சுதந்திர தின வார இறுதியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.

'ஹாய்'

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் ஏற்கனவே ஆகஸ்ட் 14-ஆம் தேதியை ரிலீஸ் தேதியை அறிவித்திருந்தநிலையில், தற்போது நயன்தாராவின் 'ஹாய்' படக்குழுவும் அதே தேதியை அறிவித்துள்ளது.

திரை விருந்து

இரு பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களும் வெவ்வேறு கதைக்களத்துடன் வெளியாக இருப்பதால், ரசிகர்களின் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த சுதந்திர தின வார இறுதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிறப்பான திரை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com