"சூரரைப் போற்று'' படத்தின் இந்தி ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா!

‘விக்ரம்’ படத்தில் ‘ரோலக்ஸ்’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சூர்யா.
"சூரரைப் போற்று'' படத்தின் இந்தி ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா!
Published on

சென்னை,

தமிழில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருந்த சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தில் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'விக்ரம்' படத்தில் 'ரோலக்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சூர்யா.

இந்த நிலையில், 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறேன் என்று சூர்யா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அத்துடன், அக்ஷய்குமார் மடியில் சூர்யா சாய்ந்து கிடக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com