'ரெட்ரோ' படத்தின் லாபத்தை அகரம் அறக்கட்டளைக்கு கொடுத்த சூர்யா


ரெட்ரோ படத்தின் லாபத்தை அகரம் அறக்கட்டளைக்கு கொடுத்த சூர்யா
x

நடிகர் சூர்யா 'ரெட்ரோ' படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் 'ரெட்ரோ'. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா 'ரெட்ரோ' படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். இவரது செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நடிகர் சூர்யா 'அகரம் பவுண்டேஷன்' என்ற அமைப்பு மூலம் படிப்பதற்கு பணம் கட்ட முடியாத ஏழை மாணவ, மாணவிகளை படிக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story