கட்டுக்கடங்கா கூட்டம், கேட் ஏறிக் குதித்து எஸ்கேப் ஆன சூர்யா

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் எதிர்பாராத அளவுக்கு கட்டுக்கு அடங்கா கூட்டம் கூடிவிட்டது இதனால் நடிகர் சூர்யா சூர்யா கேட் ஏறிக் குதித்து எஸ்கேப் ஆனார்.#ThaanaaSernthaKoottam #actorSurya
கட்டுக்கடங்கா கூட்டம், கேட் ஏறிக் குதித்து எஸ்கேப் ஆன சூர்யா
Published on

ராஜமுந்திரி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

சூர்யா பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்தாருடன் கொண்டாடாமல் ஆந்திராவில் ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். ஆந்திராவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள மேனகா தியேட்டருக்கு சென்றார் சூர்யா. தியேட்டர் நிர்வாகமே எதிர்பாராத அளவுக்கு கட்டுக்கு அடங்கா கூட்டம் கூடிவிட்டது.

ரசிகர்களின் கூட்டம் அதிகமானதால் வேறு வழியில்லாமல் சூர்யா தியேட்டரின் பின்பக்கம் உள்ள கேட்டில் ஏறிக் குதித்து சென்றுள்ளார். சாதாரண நபர் போன்று சூர்யா கேட்டில் ஏறிக் குதித்த வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com