வயநாடு நிலச்சரிவு - நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நிதியுதவி

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நிதியுதவி வழங்கியுள்ளனர்.
வயநாடு நிலச்சரிவு - நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நிதியுதவி
Published on

சென்னை,

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 3வது நாளாக நடந்து வருகிறது. ராணுவம், விமானப்படை, கடற்படையினர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் போராடி வருகின்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்து வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 291-ஆக உயர்ந்துள்ளது. பலர் மாயமாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிரிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் நிவாரணம் வழங்கியுள்ளனர். இதற்காக கேரள முதல்- மந்திரியின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் தொகையை இவர்கள் வழங்கியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com