வெளிநாடுகளில் அதிரடி காட்டும் சூர்யா... ஞானவேல் படத்தின் அப்டேட்

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார்.
வெளிநாடுகளில் அதிரடி காட்டும் சூர்யா... ஞானவேல் படத்தின் அப்டேட்
Published on: 

சென்னை,

நடிகர் சூர்யா அடுத்தடுத்து புதிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், ‘ஜெய்பீம்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் சூர்யாவின் 48-வது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜப்பானில் நடைபெறும் படப்பிடிப்பு

ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த ஒரு வாரம் பாங்காக்கில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் முக்கியமான காட்சிகளைப் படமாக்கி வரும் படக்குழு, ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் விரைவில் நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளது.

நட்சத்திர பட்டாளத்துடன் சூர்யா

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், எலங்கோ குமரவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி

‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சூர்யா - ஞானவேல் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதிரடி மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

X