நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சூர்யா

ஸ்ரீனிவாசனின் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.
சென்னை,
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 69). கடந்த 48 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் முன்னணி கலைஞராக திகழ்ந்தவர். இயக்குனராகவும், நடிகராகவும் அறியப்பட்ட ஸ்ரீனிவாசன், திரைக்கதை ஆசிரியராகவும் செயலாற்றி வந்தவர்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் மூலம் தனி முத்திரை பதித்த இவர், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் நேற்று காலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். ஸ்ரீனிவாசனின் இறுதிச்சடங்கு இன்று நடக்கின்றது.






