’சூர்யா 46’ திரைக்கு வருவது எப்போது? - வெளியான முக்கிய தகவல்

இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.
’சூர்யா 46’ திரைக்கு வருவது எப்போது? - வெளியான முக்கிய தகவல்
Published on

சென்னை,

சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ’சூர்யா46’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படம் ஜூலை மாதம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில், இந்த படம் ஏப்ரலில் வெளியாகும் என்று கூறப்பட்டநிலையில், தற்போது ஜூலையில் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கிறது.

Also Read
’சூர்யா 46’ படத்தின் ஒன்லைன் இதுதான் - தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்
’சூர்யா 46’ திரைக்கு வருவது எப்போது? - வெளியான முக்கிய தகவல்

இந்த படம் 45 வயது ஆணுக்கும் 20 வயது பெண்ணுக்கும் இடையிலான காதலை மையப்படுத்தி உருவாவதாக தெரிகிறது. மேலும், இதில் சூர்யாவின் கதாபாத்திரம் கஜினி படத்தில் வரும் சஞ்சய் ராமசாமியின் கதாபாத்திரத்தை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதில் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com