சூர்யாவின் 46வது படத்தின் டைட்டில் நாளை வெளியீடு

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 46வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.
சூர்யாவின் 46வது படத்தின் டைட்டில் நாளை வெளியீடு
Published on

நடிகர் தனுஷின் ‘வாத்தி’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்க நாக வம்சி தயாரிக்கிறார். மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில், நடிகைகள் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10.18 மணிக்கு வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வருகிற மே மாதத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com