சூர்யாவின் "கருப்பு" படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ படத்தின் டீசர் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யாவின் "கருப்பு" படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'கருப்பு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி 'கருப்பு' படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்த நாளான 23ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com