சூர்யாவின் 'கங்குவா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சூர்யாவின் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Sept 2024 11:49 AM IST (Updated: 19 Sept 2024 2:17 PM IST)
t-max-icont-min-icon

கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது

சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவா படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தை அக்டோபர் 10ம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக்டோபர் 10ம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதால் 'கங்குவா' ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இணையவாசிகள் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். நடிகர் சூர்யா "ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்திற்காக 'கங்குவா' படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. மூத்தவர், சினிமாவின் அடையாளம், 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதால் ரஜினிகாந்த் படத்திற்கு வழிவிடுவோம். 'கங்குவா' ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். 'கங்குவா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில்அறிவிக்கப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில் கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி கங்குவா திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் .


Next Story