

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘கருப்பு’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் மே 14-ந்தேதி தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த படத்திலிருந்து "காட் மோட்", "நாங்க நாலு பேரு", "ராத்து ராசன்" என்ற பாடல்கள் அடுத்தடுத்து வெளியாக ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றன.
இந்த நிலையில், ‘கருப்பு’ படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 26ம் தேதி மதுரையில் உள்ள சோலைமலை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என படக்குழுவினர் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். முன்னதாக, இப்படம் கருப்புசாமியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதால் மதுரையில் இசைவெளியீட்டு விழா நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.