

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் மே 14-ந்தேதி தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
இதனை தொடர்ந்து வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `விஸ்வநாத் & சன்ஸ்' படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. அடுத்து ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகிவரும் `சூர்யா 47' படம் தயாராகி வருகிறது.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘கருப்பு’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி ஸ்பெஷலாக கருப்பு படத்தின் முதல் பாடலான ‘காட் மோட்’ பாடல் வெளியாகி வைரலானது. ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெறும் ‘நாங்க நாலு பேரு’ பாடல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘ராத்து ராசன்’ வெளியாகியுள்ளது. இப்பாடல் விவேக் வரிகளில் சாய் அபியங்கர், வி.எம்.மகாலிங்கம், பால் டப்பா இணைந்து பாடியுள்ளனர்.