சூர்யாவின் “காவல்கார கருப்பு” மேக்கிங் வீடியோ வெளியீடு

சூர்யாவின் திரையுலக பயணத்தில் புதிய வசூல் சாதனையை ‘கருப்பு’ படம் பதிவு செய்துள்ளது.
சூர்யாவின் “காவல்கார கருப்பு” மேக்கிங் வீடியோ வெளியீடு
Published on

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவான கருப்பு கடந்த சில நாள்களாக தமிழக திரையரங்குகளில் சாமியாடிக்கொண்டிருக்கிறது என்றாலும் மிகையாகாது. விடுமுறை நாள்களுக்கு வந்த கூட்டம் வேலை நாள்களிலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. நடிகர் சூர்யாவின் சினிமா கேரியரில், திரையரங்குகள் மூலம் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலை கடந்த முதல் திரைப்படமாக ‘கருப்பு’ உருவெடுத்துள்ளது.

‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. திரைப்படம் விரைவில் ரூ.500 கோடியைக் கடந்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல்செய்த திரைப்படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் வெளிநாடுகளில் இப்படம் 7 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘கருப்பு’ திரைப்படம் வரும் ஜூன் 12ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘கருப்பு’ படத்தின் ‘ஆத்தி ராசாத்தி’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பா. விஜய் எழுதிய இந்தப் பாடலை தாஸ் பெஞ்சமின் பாடியுள்ளார். இப்பாடல் திரையரங்கில் மிகுந்த கவனம் பெற்று வருகிறது.

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி வணிக ரீதியாகவும் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபகரமான படமாக மாறியுள்ளது. நடிகர் சூர்யாவின் திரைப்படங்களிலேயே இதுவே அதிக வசூலைச் செய்திருப்பதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் காவல்கார கருப்பாக சூர்யா நடித்திருந்தது பலரையும் ரசிக்க வைத்தது. காவல்கார கருப்பாக சூர்யா மேக்கப் செய்துகொண்டு, படப்பிடிப்பில் நடித்த மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com