

சூர்யா நடிப்பில் உருவான ‘சீன்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பிரபல மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
'ஆவேஷம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம், சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூர்யாவின் ‘சீன்’ படத்தின் முதல் பாடலான ‘ஆத்தி யார்ரா இவ’ பாடல் அக்டோபர் 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுஷின் ஷியாம் இசையமைப்பில் இது உருவாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் படம் ‘சீன்’ என்பதால் நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.