சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் 2வது பாடலின் புரோமோ வெளியீடு

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் 2வது பாடலின் புரோமோ  வெளியீடு
Published on

சென்னை,

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார்.

சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவின் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் 2-வது பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. முழுப்பாடல் வருகிற ஜூலை 25 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கென் எழுதிய இப்பாடலை சூர்யா பாட, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com