சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது - நடிகை ரகுல் பிரீத் சிங்

‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.
சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது - நடிகை ரகுல் பிரீத் சிங்
Published on: 

‘ராமாயணா’ படத்தில் சூர்ப்பனை கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.

‘ராமாயணா’ படத்தில் ரகுல் பிரீத் சிங்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ரகுல் பிரீத் சிங், தமிழில் ‘தடையற தாக்க, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, அயலான், இந்தியன் 2’ படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் 'இந்தியன்-3' திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இந்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘ராமாயணா’ படத்தில் சூர்ப்பனையாக நடித்துள்ளார்.

வருமான வரி சோதனை போன்ற பல்வேறு சிக்கல்களையும், விமர்சனங்களையும் கடந்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்துகொண்ட பின்னரும் படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார்.

இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி

இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

முன்பதிவு வசூல் ரூ.25 கோடி

ரன்பீர் கபூர், யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்பதிவு வசூல் உலகளவில் ரூ.25 கோடியைத் தாண்டியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுவரை சுமார் 3 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் ‘ராமாயணா’

இதனிடையே படத்தின் உலகளாவிய பிரீமியர் கடந்த 27ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. படம் பார்த்த பெரும்பாலானோர் நல்ல வரவேற்பை கொடுத்தனர். இதனால் ராமாயணக் கதை ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள்.

சூர்ப்பனகை கதாபாத்திரம்

இந்த நிலையில் சூர்ப்பனகையாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் தனது கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. முதலாவது, இந்தப்படம் உலகிற்கு இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முயற்சி. நமது வரலாறு மற்றும் உண்மையை, திரைப்படத்தின் வாயிலாக உலகிற்கு எடுத்துச் செல்வது முக்கியமானது.

இரண்டாவது, சூர்ப்பணகை கதாபாத்திரம் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, அதே சமயம் பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு பாத்திரம். உண்மையில், இந்த யுத்தம் நடப்பதற்கே அவள்தான் காரணமாக இருந்தாள். எனவே, இத்தனை நுணுக்கமான குணங்களைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. வரலாற்​றில் அவர் ஒரு குறிப்​பிட்ட நிகழ்​வுக்​காக மட்​டுமே அறியப்​படு​கிறார். ஆனால் அவரது கதையில் இன்​னும் பல விஷயங்​கள் இருக்கிறது. ஒரு நடிகை​யாக, மக்​களின் பார்​வையை மாற்​றும் சவாலான கதாபாத்​திரங்​களில் நடிப்​பது மிகுந்த உற்​சாகத்தைத் தருகிறது” என்றார்.

X