மதுரை கருப்பண்ணசாமி சன்னதியில் சூர்யா - ஜோதிகா தம்பதியினர் சாமி தரிசனம்

சூர்யாவின் திரையுலக பயணத்தில் புதிய வசூல் சாதனையை ‘கருப்பு’ படம் பதிவு செய்துள்ளது.
மதுரை கருப்பண்ணசாமி சன்னதியில் சூர்யா - ஜோதிகா தம்பதியினர் சாமி தரிசனம்
Published on

சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இரண்டு வாரங்களில் ‘கருப்பு’ திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இத்திரைப்படம் விரைவில் ரூ.500 கோடியைக் கடந்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல்செய்த திரைப்படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் வெளிநாடுகளில் இப்படம் 7 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இப்படம் வெளியான மூன்றாவது வாரத்திலும் திரைகளில் நல்ல கூட்டம் இருப்பதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என தெரிகிறது.

‘கருப்பு’ திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் காவல்கார கருப்பாக சூர்யா நடித்திருந்தது பலரையும் ரசிக்க வைத்தது. காவல்கார கருப்பாக சூர்யா மேக்கப் செய்துகொண்டு, படப்பிடிப்பில் நடித்த மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘கருப்பு’ பட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் சூர்யா படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கும் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு மகேந்திரா பிஇ 6 பேட்மேன் ரக காரை பரிசளித்துள்ளார்.

இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் சூர்யா - ஜோதிகா தம்பதியினர் சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com