அஸ்ஸாம் காமாக்யா கோவிலில் சூர்யா - ஜோதிகா சாமி தரிசனம்


அஸ்ஸாம் காமாக்யா கோவிலில் சூர்யா - ஜோதிகா சாமி தரிசனம்
x

'ரெட்ரோ' படம் வெற்றி பெற வேண்டுமென சூர்யா, ஜோதிகா காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகரான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த அளவில் வெற்றியடைவில்லை. அதனை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், 'ரெட்ரோ' படம் வெற்றி பெற வேண்டுமென சூர்யா, ஜோதிகா இருவரும் அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது இந்தியாவின் பழமையான கோவில்களில் ஒன்றாகும். சாமி தரிசனத்தின் போது எடுத்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தான் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story