ஆகஸ்டில் வெளிவரும் சூர்யாவின் ‘காப்பான்’

சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படம் ஆகஸ்டில் வெளிவர உள்ளது.
ஆகஸ்டில் வெளிவரும் சூர்யாவின் ‘காப்பான்’
Published on

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா ஆகியோர் நடித்துள்ள படம் காப்பான். இந்த படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது. அரசியல், பயங்கரவாதம் பற்றிய காட்சிகள் டிரெய்லரில் உள்ளன.

விவசாயியாக வரும் சூர்யா, நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து ஆவேசமாக பேசுகிறார். இயற்கையாக உற்பத்தியாகும் நதியை தனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது என்று ஆவேசமாக பேசுகிறார். விவசாயிகள் போராட்டம் கலவரமாக மாறி பலர் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகளும் டிரெய்லரில் உள்ளன.

சூர்யா உழவு மாடுகளை பிடித்தபடி ஏர் கலப்பையுடன் வரும் காட்சியும் உள்ளன. படத்தில் மோகன்லால் பிரதமராக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. சியாச்சின், கார்க்கில் அடுத்து சர்ஜிக்கல் அட்டாக். இதைத்தான் விரும்புகிறதா? உங்கள் பாகிஸ்தான் என்று மோகன்லால் கோபமாக பேசும் வசனமும் உள்ளது.

சாயிஷாவின் காதலராக வரும் ஆர்யா தமிழ்நாட்டை பாலைவனமாக்கி விட்டு இந்தியாவை சூப்பர் பவர் ஆக்கப்போகிறீர்களா? என்று கேள்வி எழுப்புகிறார். பாதுகாப்பு அதிகாரியாகவும் சூர்யா அதிரடி சண்டை போடுகிறார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com