புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா புதியதாக ‘ழகரம்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் சூர்யா
Published on

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்சன் செய்தது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார். சூர்யா தன் திரைவாழ்க்கையில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் வெற்றிகரமாக வலம் வருகின்றார் சூர்யா.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ள கருப்பு படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளார். கருப்பு படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது, இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா புதியதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ழகரம் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக ஜித்து மாதவனின் படமும், இரண்டாவது படமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் படமும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் சூர்யா எண்டர்டெயின்ட்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com