வெங்கட் பிரபுவின்‘பார்ட்டி’ படத்துக்காக சூர்யா–கார்த்தி, சொந்த குரலில் பாடினார்கள்

‘பார்ட்டி’ படத்துக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.
வெங்கட் பிரபுவின்‘பார்ட்டி’ படத்துக்காக சூர்யா–கார்த்தி, சொந்த குரலில் பாடினார்கள்
Published on

வெங்கட் பிரபு டைரக்ஷனில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், பார்ட்டி. இந்த படத்துக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இதுபற்றி டைரக்டர் வெங்கட் பிரபு கூறியதாவது:

பேச வார்த்தைகளே இல்லை. இந்த அழகானஅன்பான சகோதரர்களின் புகழ், நேரம் மற்றும் அவர்களின் குரல்

ஆகியவற்றை எங்களுக்கு அளித்தது, எங்கள் குழுவுக்கு பெருமை. இந்த பாடலுக்குஇந்த கூட்டணிக்கு உருவாகியுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு, எங்கள் வணிக கூட்டாளிகளுக்கும் பெருமைதான்.

பார்ட்டி படம் ஜெய், ஷாம், சிவா, சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யாகிருஷ்ணன், ரெஜினா கசன்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி என மிக முக்கிய நடிகர்களின் நடிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக, பார்ட்டி மாறியிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com