சூர்யாவின் “கருப்பு” படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் வரும் மே 14-ம் தேதி வெளியாகிறது.
சூர்யாவின் “கருப்பு” படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
Published on

நடிகர் சூர்யாவின் 45-வது படம் ‘கருப்பு’ . இந்தப் படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். ஹீரோயினாக திரிஷா நடித்துள்ளார். மேலும் நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படம் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. சூர்யா இப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

இப்படத்திலிருந்து முதல் பாடலான ‘காட் மோட்’ பாடல் வெளியாகி வைரலானது. ‘கருப்பு’ படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் சிம்பு பாடியிருப்பதாகவும், விரைவில் பாடல் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இதனை, உறுதிப்படுத்தும் விதமாக சாய் அபயங்கர் தனது ஸ்டுடியோவில் சிம்புவுடன் எடுத்தப் புகைப்படம் வைரலானது.இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், “கருப்பு” படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com