சுசீந்திரன் இயக்கிய '2கே லவ் ஸ்டோரி' திரைப்படத்திற்கு 'யு' சான்றிதழ்

சுசீந்திரன் இயக்கிய ‘2கே லவ் ஸ்டோரி’ திரைப்படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கிய '2கே லவ் ஸ்டோரி' திரைப்படத்திற்கு 'யு' சான்றிதழ்
Published on

சென்னை,

வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். சிம்புவை வைத்து கடைசியில் ஈஸ்வரன் படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் '2கே லவ் ஸ்டோரி'. இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள் குழு வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த படத்தின் திரைக்கதையை சுசீந்திரன் அமைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் சுசீந்திரன் மற்றும் டி.இமான் இணையும் 10-வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் சென்னையில் நடைபெற்றது.

'2கே லவ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com