மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள்; நடிகருடைய சகோதரி இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு!

நடிகரின் சகோதரி ஸ்வேதா சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள்; நடிகருடைய சகோதரி இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு!
Published on

மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், 2020இல் தனது பாந்த்ரா இல்லத்தில் காலமானார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இன்றைய தினம் அவரது 2வது ஆண்டு நினைவு நாளில், மறைந்த நடிகரின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது சகோதரருக்கு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, "பாய், நீங்கள் உங்கள் இன்னுயிரை நீத்து 2 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் நீங்கள் உங்கள் மீதான மதிப்பால் என்றும் அழியாதவராக ஆகிவிட்டீர்கள்.அனைவரிடமும் கருணை, இரக்கம் மற்றும் அன்பு ஆகியவை உங்கள் நற்பண்புகளாக இருந்தன.

நீங்கள் பலருக்கு நிறைய செய்ய விரும்பினீர்கள். உங்களின் அற்புதமான நற்பண்புகள் மற்றும் இலட்சியங்களை நாங்கள் தொடர்ந்து முன்மாதிரியாக வைத்திருப்போம்.நீங்கள் உலகை சிறப்பாக மாற்றியுள்ளீர்கள், நீங்கள் இல்லாத நேரத்திலும் அதைத் தொடர்ந்து செய்வோம். இன்றே தீபம் ஏற்றி ஒருவரின் முகத்தில் புன்னகையை வரவழைக்க தன்னலமற்ற செயலைச் செய்வோம்"

View this post on Instagram

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அவரது மறைவுக்குப் பிறகு, மறைந்த நடிகரின் தொலைநோக்கி, புத்தகங்கள், கிடார் மற்றும் பிற தனிப்பட்ட விஷயங்களைக் கொண்டு அவரது பாட்னா இல்லம் அவரது நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com