சுஷாந்த் சிங் தனது போதை பழக்கத்தைத் தக்க வைக்க தனக்கு நெருக்கமானவர்களைப் பயன்படுத்தினார்- ரியா சக்ரபோர்த்தி

சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது போதை பழக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள தனக்கு நெருக்கமானவர்களைப் பயன்படுத்திக் கொண்டது துரதிர்ஷ்டவசமானது என ரியா சக்ரபோர்த்தி குற்றம்சாட்டி உள்ளார்.
சுஷாந்த் சிங் தனது போதை பழக்கத்தைத் தக்க வைக்க தனக்கு நெருக்கமானவர்களைப் பயன்படுத்தினார்- ரியா சக்ரபோர்த்தி
Published on

மும்பை:

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண விசாரணையின் போது போதைப்பொருள் வழக்கில் காதலில் ரியா சக்ரவர்த்தி செப்டம்பர் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இரண்டுமுறை ஜாமீன் அப்பீல் செய்தும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை இந்த நிலையில் ரியா சக்ரபோர்த்தி, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தனக்கு எதிராக சூனிய வேட்டை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். \\

சுஷாந்த் சிங் ராஜ்புத் "தனது போதை பழக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள தனக்கு நெருக்கமானவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்" என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மும்பை உயர் நீதிமன்றத்தால் நாளை விசாரிக்கப்பட உள்ள நிலையில் மும்பையில் பலத்த மழை காரணமாக இது ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

ரியா ஜாமீன் மனுவில், "சுஷாந்த் சிங் ராஜ்புத் மட்டுமே போதைப்பொருள் பயன்படுத்தினார். அவர் தனது ஊழியர்களை தனக்கு போதைப்பொருள் வாங்குமாறு அறிவுறுத்தினார் என்று தெளிவாகிறது. "மறைந்த நடிகர் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் சிறிய அளவிலான பயன்பட்டிற்காக குற்றம் சாட்டப்பட்டிருப்பார், இது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஜாமீன் இல்லா குற்றமாகும்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது போதை பழக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள தனக்கு நெருக்கமானவர்களைப் பயன்படுத்திக் கொண்டது துரதிர்ஷ்டவசமானது, மேலும் அவை ஏற்படும் அபாயங்களுக்கு அவற்றை அம்பலப்படுத்துவது பொருத்தமானது என்று நினைத்தேன்.

"ஆகவே, மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மட்டுமே போதைப்பொருள் நுகர்வோர் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களை அவரது போதை பழக்கத்தை எளிதாக்கும் பழக்கத்தில் இருந்தார் என்பது புலனாய்வு அமைப்புகளால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து தெளிவாகிறது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறைவான குற்றங்களின் எல்லைக்குள் வரும் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com