'பிரசவத்திற்கு பின் எடை கூடுவது இயற்கை' - உருவக்கேலி குறித்த பதிவிற்கு நடிகை பதிலடி

பிரசவத்திற்கு பிறகு ஸ்வரா பாஸ்கரின் உடல் எடை அதிகரித்து இருக்கிறது.
'பிரசவத்திற்கு பின் எடை கூடுவது இயற்கை' - உருவக்கேலி குறித்த பதிவிற்கு நடிகை பதிலடி
Published on

சென்னை,

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்வரா பாஸ்கர். இவர் தனுஷ் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் ரிலீசான ராஞ்சனா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது. சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு அவரது உடல் எடை அதிகரித்து இருக்கிறது.

இதுகுறித்து நளினி என்பவர் சமூக ஊடகத்தில் உருவக்கேலி செய்யும் விதத்தில், நடிகை ஸ்வாரா பாஸ்கர் பிரசவத்திற்குப் பிறகு எடை அதிகரித்திருக்கும் புகைப்படத்தையும் திருமணத்திற்கு முன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்ததோடு, அவர் என்ன சாப்பிட்டார்? என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த பதிவிற்கு நடிகை ஸ்வரா பாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். அதில், உடல் எடை அதிகரித்து இருக்கும் ஒரு பெண்ணை அவமானப்படுத்தும் அளவுக்கு மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். ஒரு பெண் பிரசவத்திற்குப் பிறகு எடை அதிகரிப்பது மிகவும் இயற்கையானது. அதற்காக அவரை அவமானப்படுத்துவது, கர்ப்பம் மற்றும் பிரசவம் குறித்த ஒருவரின் அறியாமையை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com