'இன்று முதல் 'ஸ்வீட் ஹார்ட்' உங்களுடையது' - ரியோ ராஜ் நெகிழ்ச்சி


sweet heart is Yours  - Rio Raj
x
தினத்தந்தி 14 March 2025 10:25 AM IST (Updated: 14 March 2025 11:24 AM IST)
t-max-icont-min-icon

'ஸ்வீட் ஹார்ட்' திரைப்படம் இன்று வெளியானநிலையில் ரியோ ராஜ் நெகிழ்ச்சியுடன் வீடியோ பகிர்ந்துள்ளார்.

சென்னை,

ரியோ ராஜ், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

'ஸ்வீட் ஹார்ட்' திரைப்படம் இன்று வெளியானநிலையில் ரியோ ராஜ் நெகிழ்ச்சியுடன் வீடியோ பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

'எல்லோருக்கும் வணக்கம், இவ்வளவு நாள் எங்களுடைய ஸ்வீட் ஹார்ட்டாக இருந்தது. இன்று முதல் உங்களுடைய ஸ்வீட் ஹார்ட். ரொம்ப அழகான ஒரு படம். படத்துடைய டிரெய்லர் எல்லாத்தையும் பார்த்திருப்பீர்கள். அதையும் தாண்டி இந்த படத்தில் நிறைய எமோஷன்ஸ், காமெடி இருக்கும். ஜாலியான ஒரு படம்.

நிறைய காலேஜ்களுக்கு நாங்கள் வந்திருந்தோம். எல்லோரும் அவ்வளவு அன்பு கொடுத்தீர்கள். அனைத்துக்கும் ரொம்ப நன்றி. அதற்கு பலனாக ஸ்வீட் ஹார்ட் இப்போது தியேட்டரில் உள்ளது.

ஸ்வினீத் எஸ் சுகுமார் ஒரு அறிமுக இயக்குனரா, ரொம்ப பொறுப்பாக, நல்ல விஷயத்தை பற்றி பேசி இருக்கிறார். கோபிகா ரமேஷும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். எங்க்ளுடைய எல்லா உழைப்பும் இப்போது தியேட்டரில் உள்ளது.

நேற்று என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இப்படத்தை பார்த்தனர். எல்லோரும் ஆனந்த கண்ணீருடன் வெளியே வந்தார்கள். அதேபோல உங்களுக்கும் ஒரு சந்தோஷமான படமாக இது இருக்கும். அதனால் எல்லோரும் தியேட்டருக்கு வாங்க. உங்கள் அனைவரையும் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பது என்னுடையது மட்டுமில்லாமல் மொத்த படக்குழுவோட ஆசை. உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். நண்பர்களோடு, குடும்பத்தோடு இல்ல தனியாக கூட போய் தியேட்டரில் பாருங்கள்' என்றார்


Next Story