ஆக்சன் படத்தில் நடிக்கும் நடிகை டாப்சி பன்னு


ஆக்சன் படத்தில் நடிக்கும் நடிகை டாப்சி பன்னு
x
தினத்தந்தி 11 Sept 2024 1:43 PM IST (Updated: 17 March 2025 8:44 PM IST)
t-max-icont-min-icon

டாப்சி பன்னு நடிக்கும் புதிய படத்தை கனிகா தில்லான் தயாரிக்கிறார்.

சென்னை,

தமிழில் 'ஆடுகளம்' என்ற படத்தில் அறிமுகமாகி பிரபல கதாநாயகியாக உயர்ந்தார் டாப்சி பன்னு. பின்னர் இந்தியில் தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்த நடித்து வருகிறார்.

டாப்சியின் படங்கள் நல்ல வசூல் பார்த்து வருவதால் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக உயர்ந்து இருக்கிறார். இவர் வெளிநாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இவர் தற்போது, கனிகா தில்லான் எழுதி தயாரிக்கும் புதிய ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'காந்தாரி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் தேவாஷிஷ் மகிஜா இயக்குகிறார். இப்படம் ஒரு தாய்க்கும் அவரது குழந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பை எடுத்துக்காட்டும் படமாக தயாராகிறது.

நெட்பிளிக்ஸ் மற்றும் காத்தா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை டாப்சி பன்னு இப்படம் குறித்த பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story