விஜய் சேதுபதி-பூரி ஜெகநாத் படத்தில் தபுவுக்கு இந்த கதாபாத்திரமா?

இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
சென்னை,
விஜய் சேதுபதி-பூரி ஜெகநாத் படத்தில் நடிகை தபு நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பின் ஒரு பகுதி சென்னையிலும் மீதமுள்ள பகுதி ஐதராபாத்திலும் நடைபெறுகிறது.
தபு தனது கெரியரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பது இது முதல் முறை அல்ல. மக்பூல் மற்றும் அந்தாதுன் போன்ற படங்களில், அவர் இந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தன. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இது மேலும் அதிகரித்திருக்கிறது.
நடிகை சார்மி கவுர் தயாரிக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய், நிவேதா தாமஸ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
Related Tags :
Next Story






