ஆண்கள் பற்றிய சர்ச்சை பேச்சு...வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தபு

சமீபத்தில் நடிகை தபு கூறியதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலானது.
சென்னை,
சமீப காலமாக, சமூக ஊடகங்களில் திரைப்பட நட்சத்திரங்களை பற்றிய தவறான தகவல்கள் மற்றும் அறிக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதுபோன்ற விஷயங்கள் சீக்கிரம் வைரலாகின்றன. துரதிர்ஷ்டவசமாக, சில ஊடகங்களும் அவற்றை சரியாக சரிபார்க்காமல் வெளியிடுகின்றன.
சமீபத்தில் நடிகை தபு கூறியதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலானது. தனது வாழ்க்கையில் படுக்கைக்கு தவிர வேறு எதற்கும் ஆண் தேவையில்லை என்று தபு கூறியதாக சமூக ஊடக தளங்களில் செய்திகள் வெளியாகின. இது கலவையான விமரசனங்களை பெற்றது. சிலர் அதை பாராட்டினாலும், மற்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், தபுவின் குழு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நடிகை தபு ஒருபோதும் அப்படி பேசியதில்லை என்பதை விளக்கி, அது முற்றிலும் போலியானது என்று தெரிவித்துள்ளது.
54 வயதான தபு, திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருக்கிறார். தெலுங்கு , இந்தி திரைப்படத் துறைகளில் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். தற்போது அவர், விஜய் சேதுபதியின் “ ஸ்லம்டாக் ” படத்தில் நடித்திருக்கிறார்.






