"சாதி, மதத்தை அல்ல... மனிதநேயத்தை நினைத்து பெருமைப்படுங்கள்" - நடிகை மீனாவின் பதிவு வைரல்

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், அஜித்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் மீனா.
மீனா
Published on

சென்னை,

நடிகை மீனா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. சாதி, மதம், பிறப்பு போன்றவற்றை விட மனிதநேயத்திற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

கவனம் பெற்ற இன்ஸ்டா ஸ்டோரி

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மீனா,

"உங்கள் சாதி, மதம், பிறந்த இடம், பாலினம் எல்லாமே நீங்கள் தேர்வு செய்தவை அல்ல. பிறப்பால் கிடைத்தவை. அதனால் அவற்றை நினைத்து பெருமைப்பட வேண்டாம். அதற்கு பதிலாக உங்கள் குணநலன், உங்கள் செயல்கள், நீங்கள் தினமும் தேர்வு செய்யும் மனிதநேயம் ஆகியவற்றை நினைத்து பெருமைப்படுங்கள்" என்று பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய பயணம்

மூன்று வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான மீனா, 'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் சிறிய இடைவெளிக்குப் பிறகு 'என் ராசாவின் மனசிலே' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.

பல மொழிகளில் வெற்றிகரமான நடிகை

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், அஜித்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள மீனா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com