குந்தவை விவகாரம்: கண்டனம் தெரிவித்த த்ரிஷா; வருத்தம் கூறிய நடிகர் பார்த்திபன்

பார்த்திபன் பேசியது அறிவு இல்லாத கரடு முரடான வார்த்தைகள் என்று த்ரிஷா விமர்சனம் செய்துள்ளார்.
குந்தவை விவகாரம்: கண்டனம் தெரிவித்த த்ரிஷா; வருத்தம் கூறிய நடிகர் பார்த்திபன்
Published on

சென்னை,

தயாரிப்பாளர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய், த்ரிஷா கலந்து கொண்டது விவாதப்பொருளாகிவிட்டது. இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து, ஒரே வாகனத்தில் வந்து சென்றதால் சமூகவலைதளங்களில் பலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதையடுத்து அந்த கல்யாண விசேஷத்திற்கு ரெடியானபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சேலை எந்த கடையில் வாங்கியது, நகை எங்கு வாங்கியது, மேக்கப் போட்டுவிட்டது யாரென்று தெரிவித்திருந்தார் த்ரிஷா.

இந்நிலையில் அவர் கல்பாத்தி வீட்டு விசேஷத்திற்கு அணிந்து வந்த புடவையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை விழா ஒன்றில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபனிடம் காட்டி உங்களின் குந்தவை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு பார்த்திபனோ, இந்த குந்தவைய கொஞ்ச நாள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே குந்த வைக்கிறது நல்லது. அது பல பிரச்சனைகளை உண்டாக்காமல் இருப்பதற்காக. அதனால் சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர கவிதை சொல்லாமல் இருப்பது நல்லது என்றார். அதை கேட்டு அரங்கில் இருந்தவர்கள் கை தட்டி விசில் அடித்ததுடன் சூப்பர் சூப்பர் என்றார்கள்.

பார்த்திபனின் பேச்சை கேட்ட சமூக வலைதளவாசிகளோ, திரைத்துறையில் இருந்து சமுத்திரக்கனியை அடுத்து தைரியமாக பேசியிருப்பவர் பார்த்திபன் தான் என்றனர்.

இந்தநிலையில், இந்த குந்தவையை கொஞ்சா நாளைக்கு வீட்டிலேயே குந்தவைச்சா பிரச்சினை வராது என பார்த்திபன் பேசியதற்கு நடிகை த்ரிஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் த்ரிஷா பதிவிட்டுள்ளதாவது:-

நிகழ்ச்சி ஒன்றில் ஒரு தனி நபரின் வேண்டுகோள் படி என் புகைப்படம் சேர்க்கப்பட்டு அது குறித்து தேவையற்ற கருத்துகள் பேசப்பட்டுள்ளதாக அறிகிறேன். மைக்கில் பேசுவதால் முட்டாள்தனமான கருத்து சரி ஆகிடாது. அறிவில்லாமல் பேசும் வார்த்தைகள் பேசப்படுபவரை விட பேசுபவரின் சுயரூபத்தையே காட்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் பார்த்திபன் பெயரை குறிப்பிடாமல் நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். பார்த்திபன் பேசியது அறிவு இல்லாத கரடு முரடான வார்த்தைகள் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தனது பெயரும், படமும் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக த்ரிஷா தகவல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே எனது பேச்சு குந்தகமாகி விட்டது-த்ரிஷாவுக்கு வருத்தம் தெரிவித்தார் நடிகர் பார்த்திபன். இது தொடர்பாக பார்த்திபன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

எனது பேச்சு குந்தமாகிவிட்டது. வார்த்தை ஜாலத்துக்காக பேசியது தவறாகி விட்டது. எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது. இதில் வருந்துவதை தவிர வேறு வழியில்லை என அதில் கூறியுள்ளார். த்ரிஷா கண்டனம் தெரிவித்த நிலையில் வருத்தம் தெரிவித்து பார்த்திபன் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com