'நைன் மடாக்கா' பாடலுக்கு நடனமாடிய தமன்னா, வாமிகா கபி - சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் கொடுத்த ரியாக்சன்

சமீபத்தில், 'பேபி ஜான்' படத்தின் முதல் பாடலான 'நைன் மடாக்கா' வெளியாகி வைரலானது.
Tamanna, Wamiqa Kabhi dance to the song from the movie 'Baby John' - Samantha and Keerthy Suresh reaction
Published on

சென்னை,

இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள படம் "பேபி ஜான்". அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. சமீபத்தில், இப்படத்தின் முதல் பாடலான 'நைன் மடாக்கா' வெளியாகி வைரலானது.

இந்நிலையில், நடிகை தமன்னாவும், வாமிகா கபியும் 'நைன் மடாக்கா' பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ வைரலானநிலையில், நடிகை சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் அதற்கு ரியாக்சன் கொடுத்துள்ளனர். அதன்படி, இந்த வீடியோவை சமந்தா லைக் செய்துள்ளார். மேலும், கீர்த்தி சுரேஷ், 'இந்த ஜோடி எனக்கு பிடித்திருக்கிறது' என்று கமெண்ட் செய்துள்ளார்.

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'தெறி'. இந்த படத்தில் விஜய்யுடன் சமந்தா, மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் இந்தி ரீமேக்தான் 'பேபி ஜான்' என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com