வி.சாந்தாராம் ‘பயோபிக்’ - ஜெயஸ்ரீயாக தமன்னா - வைரலாகும் பர்ஸ்ட் லுக்


Tamannaah Bhatia Joins ‘V. Shantaram’ Biopic as Legendary Actor Jayashree, First Look Unveiled
x

இதை அபிஜித் தேஷ்​பாண்டே இயக்​கு​கிறார்.

சென்னை,

பாலிவுட்டின் ஜாம்பவான் இயக்குனர் வி.சாந்தாராம் பயோபிக், சித்ராபதி வி.சாந்தாராம் என்ற பெயரில் படமாகிறது. இதில் சித்தாந்த் சதுர்வேதி, சாந்தாராமாக நடிக்கிறார். இதை அபிஜித் தேஷ்​பாண்டே இயக்​கு​கிறார்.

நடிகை தமன்னா , இதில் நடிகை ஜெயஸ்ரீயாக நடிக்கிறார் . நடிகை ஜெயஸ்ரீயாக தமன்னாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஜெயஸ்ரீ, வி. சாந்தாராமின் இரண்டாவது மனைவியும் அவரது சினிமா பயணத்தில் முக்கிய நபரும் ஆவார்.

1940 மற்​றும் 1950-களில் பல இந்தி மற்​றும் மராத்தி திரைப்​படங்​களை இயக்​கிய​வர் வி.சாந்தாராம். இந்​திய அளவில் அவருக்குப் புகழைச் சேர்த்த ‘பர்​சா​யின்’, ‘ஆத்​மி’, ‘சகுந்​தலா’, தஹேஜ், ‘படோஸி’, ‘சந்திரசே​னா’ உள்பட பல படங்​களை இயக்​கி​யுள்​ளார்.

‘தோ ஆங்​கேன் பாரஹாத்’ எனும் இந்தி படம் இவருக்​குப் பல விருதுகளைப் பெற்​றுக் கொடுத்​தது. ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ என்ற படத்​தில் இந்​தி​யா​வின் முதல், டெக்​னிக் கலரை பயன்படுத்தி இயக்​கிய​வர் இவர்.

1 More update

Next Story