பட வாய்ப்புகளை மீண்டும் பிடிக்க தமன்னா தீவிரம்

தமன்னா பட வாய்ப்புகளை பெறும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக தனது கவர்ச்சிப் படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
பட வாய்ப்புகளை மீண்டும் பிடிக்க தமன்னா தீவிரம்
Published on

தென்னிந்திய சினிமாவின் 'இடையழகி'யான தமன்னாவுக்கு, சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் விரக்தியில் பல்வேறு விமர்சனங்களை அள்ளி வீசத் தொடங்கினார். 'சினிமாவில் பெண்களுக்கு மதிப்பு கிடையாது' என்றும், 'கதாநாயகனுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு சம்பளம் வழங்கப்படுவது கிடையாது' என்றும் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். 

இதனால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சினிமாவில் இப்படியெல்லாம் வெளிப்படையாக பேசக்கூடாது என்று, சக நடிகர்-நடிகைகளும் அவருக்கு அறிவுரை கூறத்தொடங்கினர். 'திறமையைக் கொண்டு மீண்டும் விட்ட இடத்தைப் பிடி' என ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.

இதனால் தமன்னா பட வாய்ப்புகளை பெறும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக தனது கவர்ச்சிப் படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார். மாடர்ன் உடையைத் தாண்டி, புடவையிலும் தன்னால் கவர்ச்சி காட்ட முடியும் என்று நிரூபிக்கும் வகையில், பச்சை நிற புடவையில் அசத்தல் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

தமன்னாவின் கவர்ச்சிப் படங்களால் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். 'தமன்னா ரிட்டர்ன்ஸ்' என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com