அடுத்த ஹாரர் திரில்லர்... ஜூனியர் நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா

"ராகினி எம்.எம்.எஸ்" படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிப்பதாக தெரிகிறது.
அடுத்த ஹாரர் திரில்லர்... ஜூனியர் நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
Published on

சென்னை,

சினிமா உலகில் அறிமுகமாகி ஏறத்தாழ 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையிலும், தமன்னா தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 'லஸ்ட் ஸ்டோரிஸ்' போன்ற வெப் சீரிஸ்களைத் தொடர்ந்து, தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹாரர்-திரில்லர் தொடரான "ராகினி எம்.எம்.எஸ்" படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிப்பதாக தெரிகிறது.

இந்தப் படத்தில் தமன்னாவிற்கு ஜோடியாக ஆயுஷ் சர்மா நடிப்பதாக கூறப்படுகிறது. தமன்னாவை விட ஆயுஷ் சர்மா ஒரு வயது இளையவர் மற்றும் சினிமாவில் அவருக்கு மிகவும் ஜூனியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அமீர் கானின் மகன் ஜுனைத் கான் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

Also Read
காவலர்கள் முதல் சாலைப் பிரச்சினை வரை.. முதல்-அமைச்சர் விஜய்க்கு நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள்
அடுத்த ஹாரர் திரில்லர்... ஜூனியர் நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா

ஷஷாங்க் கோஷ் இயக்கும் இத்தொடர் காதல் மற்றும் திகில் காட்சிகள் நிறைந்த ஒரு கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com