தமன்னாவுக்கு கிடைத்த அங்கீகாரம்.. புகழ்பெற்ற பத்திரிகையில் புகைப்படம் வெளியீடு..!

நடிகை தமன்னாவின் புகைப்படம் 'குளோபல் ஸ்பா' பத்திரிகையின் அட்டை பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
Image Credits: Instagram.com/globalspaindia
Image Credits: Instagram.com/globalspaindia
Published on

சென்னை,

தமன்னா 16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார். கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களோடு நடித்தார். தற்போது ரஜினிகாந்த் உடன் 'ஜெயிலர்' படத்திலும் நடித்துள்ளார்.

'ஜெயிலர்' படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடல் சமீபத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாடலின் மூலம் உலகம் முழுவதும் தமன்னா பிரபலமடைந்தார். முன்னதாக நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இடையே காதல் என பேசப்பட்டது. பின்னர் கிசுகிசுக்கப்பட்ட காதல் விவகாரத்தை தமன்னாவே உறுதி செய்து அறிவித்தார்.

இந்நிலையில் புகழ்பெற்ற 'குளோபல் ஸ்பா' பத்திரிகையின் அட்டை பக்கத்தில் நடிகை தமன்னாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் தமன்னாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com