

தமிழில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா 'கேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். திரைத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தன் நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். அதன்பின்னர், தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தமன்னா நடித்துள்ள படம் 'பப்ளி பவுன்சர்'. இந்த படத்தை இயக்குனர் மதுர் பண்டர்கர் இயக்கியுள்ளார். இதில் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹல் வைத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது
அதன்படி,செப்டம்பர் 23-ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.