வைரலாகும் தமன்னா சொத்து விவரம்...!

தமன்னாவின் சொத்து விவரம் என்ற பெயரில் புதிய சொத்துப்பட்டியல் வலைத்தளத்தில் வைரலாகிறது
வைரலாகும் தமன்னா சொத்து விவரம்...!
Published on

தமன்னாவை ஜெயிலர் பட காவாலைய்யா பாடலும், லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடர் படுக்கை அறை காட்சிகளும் இன்னொரு உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

தமன்னாவின் தற்போதைய மார்க்கெட் நிலவரத்தை பார்த்த விடாமுயற்சி படக்குழுவினர் அஜித்குமாருக்கு ஜோடியாக்க பரிசீலிக்கிறார்கள். ஏற்கனவே திரிஷாவை முடிவு செய்து வைத்திருந்த நிலையில் இப்போது தமன்னாவிடம் பேசுகிறார்கள்.

இந்த நிலையில் தமன்னாவின் சொத்து விவரம் என்ற பெயரில் புதிய சொத்துப்பட்டியல் வலைத்தளத்தில் வைரலாகிறது. அதில் தமன்னா ரூ.120 கோடிக்கு மேல் சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. தமன்னா சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

விஜய், அஜித்குமார், தனுஷ் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் ஒரு பாடலில் குத்தாட்டம் ஆட ரூ.1 கோடி வரை கேட்பதாகவும் வருடத்துக்கு ரூ.12 கோடி வரை சம்பாதிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மும்பையில் ரூ.16 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார் என்கின்றனர். சொந்தமாக தங்க நகை வியாபாரமும் செய்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com