இந்தி நடிகருடன் தமன்னா காதல்

இந்தி நடிகர் விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இந்தி நடிகருடன் தமன்னா காதல்
Published on

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா பாகுபலி மூலம் உலக அளவில் பிரபலமானார். தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தி நடிகர் விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் புத்தாண்டை கொண்டாட கோவா சென்று இருந்தனர். அங்கு விஜய் வர்மாவை தமன்னா கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு முத்தமிடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த முத்த வீடியோ இருவரும் காதலிப்பதை உறுதி செய்து இருப்பதாக திரை உலகினரும், ரசிகர்களும் பேசி வருகிறார்கள். விஜய் வர்மா 2012-ம் ஆண்டு 'சிட்டகாங்' படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பிங்க், மான்சூன் ஷூட் அவுட், மாண்டோ, கள்ளிபாய், கோஸ்ட் ஸ்டோரீஸ், ஆன்தாலாஜி படங்கள் மூலம் புகழ் பெற்றார். 2022-ல் ஆர்தாங்க், டார்லிங் படங்களில் நடித்தார்.

தற்போது கரீனா கபூர், கைதிப் அஹலாபத்துடன் இணைந்து 'த டிவோஷன் ஆப் சப்ஸ்பெக்ட் எக்ஸ்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நயன்தாராவும், ஹன்சிகாவும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் தமன்னாவுக்கு விஜய் வர்மாவுடன் இந்த வருடம் திருமணம் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com