"ரெய்டு 2" படத்தில் தமன்னா நடனமாடிய பாடல் டிரெண்டிங்


‘ரெய்டு 2’ படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சி நடனம் ஆடியுள்ள பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 2வது இடம் பிடித்துள்ளது.

தமன்னா 16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து பிரபல நடிகையாக உயர்ந்தார். தமிழில் விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார். சமீபத்தில் 'ஜெயிலர்' படத்தில் காவாலா பாடலில் நடனமாடி அனைவரது கவனத்தை ஈர்த்தார். அதனை தொடர்ந்து இந்தியில் பல முன்னயி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'பப்ளி பவுன்சர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2' போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக ஸ்த்ரீ 2 படத்தில் 'ஆஜ் கி ராத்' என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்த படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது இந்தி படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்றுள்ளது. இப்படத்தை அமர் கவுசிக் இயக்கியுள்ளார்.

அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ரெய்டு. இதில் தேவ்கன் ஐஆர்எஸ் அதிகாரி அமய் பட்நாயக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ரெய்டு படத்தின் தொடர்ச்சியாக ரெய்டு 2 உருவாகியுள்ளது. இதில், அஜய் தேவ்கன், வாணி கபூர் மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் 'நாஷா' என்ற சிறப்பு பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானநிலையில், தற்போது தமன்னா நடனமாடியுள்ள இந்த பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ரெய்டு 2 படத்தில் தமன்னா கவர்ச்சி நடனம் ஆடியுள்ள பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 2வது இடம் பிடித்துள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

ஸ்த்ரீ 2 படத்தில் தமன்னா நடனமாடிய வீடியோ பாடல் யூடியூப்பில் 50 கோடி பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story