மகா கும்பமேளாவில் வெளியாகும் தமன்னாவின் 'ஒடேலா 2' பட டீசர்!


மகா கும்பமேளாவில் வெளியாகும் தமன்னாவின் ஒடேலா 2 பட டீசர்!
x

அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள 'ஒடேலா 2' படத்தின் டீசர் மகா கும்பமேளாவில் வெளியாக உள்ளது.

அலகாபாத்,

தமிழைத்தொடர்ந்து தெலுங்கு, இந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகை தமன்னா. சமீபத்தில் அவரது 'பப்ளி பவுன்சர்', 'லஸ்ட் ஸ்டோரிஸ்' போன்ற படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றன.

அதனை தொடர்ந்து தற்போது இவர், 'ஒடேலா 2' படத்தில் நடித்து வருகிறார். இது கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான 'ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன்' படத்தின் 2-ம் பாகமாகும். இதையும் முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜா தான் இயக்குகிறார்.

ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'காந்தாரா' புகழ் அஜனேஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகின.

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வருகிற 22-ந் தேதி உத்திர பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் வெளியிடப்பட உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது.

1 More update

Next Story