தமன்னாவின் சமையல் ஆர்வம்

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடிக்கிறார்.
தமன்னாவின் சமையல் ஆர்வம்
Published on

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடிக்கிறார். தற்போது தெலுங்கு தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தமன்னா அளித்துள்ள பேட்டியில், நான் ஒரு சாப்பாட்டு பிரியை. எனது இன்ஸ்டாகிராமை பின் தொடர்வோருக்கு இது புரியும். வித்தியாசமான உணவு வகைகளை அனுபவித்து சாப்பிடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கொரோனாவுக்கு முன்னால் சினிமாவில் பிசியாக இருந்தேன். ஓய்வே கிடைக்கவில்லை. ஆனால் ஊரடங்கு ஆரம்பித்ததும் வீட்டிலேயே இருக்க வேண்டி வந்ததால் சமையல் அறைக்கு சென்று என்னால் முடிந்த உணவு வகைகளை செய்தேன். சமையல் மீது ஆர்வம் வந்தது. இதற்கு முன்பு சமையல் அறைக்குள் அடியெடுத்து வைத்தது இல்லை.

தமிழ், தெலுங்கு ரசிகர்கள் அவர்கள் வீட்டு பெண்ணாக என்னை பார்க்கின்றனர். எல்லா மொழிகளிலும் அந்தந்த கலாசாரத்துக்கு ஏற்ற மாதிரி மாறிவிடுவேன். எந்த வகை உணவுகள் ஆனாலும் இஷ்டமாக சாப்பிடுவேன். ஐதராபாத் பிரியாணி என்றால் பைத்தியம். மீன் குழம்பும் பிடிக்கும். எனக்கு இஷ்டமான உணவை அதிகம் சாப்பிட்டால் மறுநாள் கடும் உடற்பயிற்சிகள் செய்து கரைத்துவிடுவேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com