சன்னிலி யோனுடன் நடிக்கும் சதீஷ்

சர்ச்சை நடிகையான சன்னி லியோன் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். வீரமாதேவி என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடித்து வருகிறார்.
சன்னிலி யோனுடன் நடிக்கும் சதீஷ்
Published on

இந்தி, தெலுங்கு, கன்னட, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஏற்கனவே சன்னி லியோன் படங்களில் நடிக்க எதிர்ப்புகள் கிளம்பின. வட இந்தியாவில் சன்னிலியோனின் ஆபாச சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. பெங்களூருவில் புத்தாண்டு நிகழ்ச்சியொன்றில் கவர்ச்சி நடனம் ஆட எதிர்ப்பு தெரிவித்து அவரது புகைப்படங்களை எரித்து கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இதில் சதீசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பில் சன்னி லியோனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, சன்னி லியோன் மிகவும் இனிமையானவர். சிறந்த நடிகை, அற்புதமான டான்சர், மனிதநேயம் மிக்கவர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com