தமிழ் சினிமாவுக்கு கொடூர வில்லன்கள் தேவை- நடிகர் வரதராஜன்

ரஜினி, கமல், சிம்பு, தனுஷ் ஆகியோருக்கு வில்லனாக நடித்து மிரட்ட ஆசைப்படுகிறேன் என்று நடிகர் வரதராஜன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவுக்கு கொடூர வில்லன்கள் தேவை- நடிகர் வரதராஜன்
Published on

'ஜெய்ஹிந்த்', 'மாண்புமிகு மாணவன்', 'குடும்ப சங்கிலி', 'சூரிய பார்வை', 'அக்கரன்', 'திரி ரோசஸ்', 'ஹரிதாஸ்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர், ஆர்.கே.வரதராஜன். தற்போது வி.எஸ்.பாலமுருகன் இயக்கத்தில் உருவாகும் 'டென்ஷன்' என்ற படத்தில் வில்லனாக நடிக்கும் வரதராஜன், தமிழ் சினிமாவுக்கு கொடூர வில்லன்கள் தேவை என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறும் போது, “சீனியர் வில்லன் நடிகரான எனக்கு ரஜினி, கமல், சிம்பு, தனுஷ் ஆகியோருக்கு வில்லனாக நடித்து மிரட்ட ஆசைப்படுகிறேன். சினிமாவில் வில்லன்களுக்கான தேடல் நிறைய உண்டு. இன்னும் சொல்லப்போனால் கொடூர வில்லன்கள் நிறைய தேவைப்படுகிறார்கள். முன்பு வில்லன்களை திட்டுவார்கள். இப்போது வில்லன்களை ரசிக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். அந்தவகையில் வில்லனாக தொடர்ந்து மிரட்டவே ஆசைப்படுகிறேன்” என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com