நாளை திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ! (10.04.2026)

எல்ஐகே, மனிதன் தெய்வமாகலாம், டிஎன் 2026 படங்கள் நாளை தியேட்டரில் வெளியாகவுள்ளன.
நாளை திரையரங்குகளில் வெளியாகும்  தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ! (10.04.2026)
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் 10ந் தேதி (நாளை) தியேட்டர்களில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

1. எல்ஐகே

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் நடித்துள்ள ‘எல்ஐகே’ படம் நாளை வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

2040ல் உலகமே மிஷின் சொல்லும் ஜோடிகளை காதல் செய்யும் போது, சுயமாக ஒரு பெண் மீது காதல் கொள்ளும் இளைஞனுக்கு என்ன சிக்கல் வருகிறது என்பதே கதை.

2. மனிதன் தெய்வமாகலாம்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள திரைப்படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கவுசல்யா, கவுசி ரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ள இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இயற்கையும், அமைதியும் சூழ்ந்த கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது.

3. டிஎன் 2026

உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி, தம்பி ராமையா நடித்துள்ள ‘டிஎன் 2026’ படம் நாளை வெளியாகிறது. தமிழகத்துக்கு பிழைக்க வந்து, சினிமா நடிகராகி, பின்னர் அரசியலுக்கு செல்லும் நபரின் கதை.

கண்ணன் ரவி குழு மற்றும் கந்தரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள “டிஎன் 2026 தங்க நட்சத்திரம்” படத்துக்கு, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். அரசியல் பின்னணியுடன் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சாண்டி நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே படம் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது. இந்த படத்தின் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார். படத்தில் விஜய்யை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இருப்பதாக ஆதவ் அர்ஜுனாவே கடுமையாக விமர்சித்து இருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com