இந்தியில் ரீமேக்காகும் “பெருசு” திரைப்படம்

‘பெருசு’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்சு நிறுவனத்தின் மூலம் தயாரித்த படம் ‘பெருசு’. இந்த படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த் மற்றும் அவரது சகோதரர் சுனில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகை நிஹாரிகா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ 5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மரணப்படுக்கையில் இருக்கும் குடும்பப் பெரியவரின் இறப்பில் நேரும் ஒரு சம்பவம் பற்றிய துயர நகைச்சுவைக் கதையாக ‘அடல்ட் காமெடி’ பாணியில் பெருசு படம் உருவாகியிருந்தது..இந்தப் படம் கடந்த மார்ச் 14 ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமானது.
இந்நிலையில், இப்படம் தமிழை தொடர்ந்து இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது. இலங்கையில ரிலீசாகி சர்வதேச அளவில் விருதையும், பாராட்டையும் பெற்ற 'டெண்டிகோ' படத்தைதான் தமிழில் பெருசு என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்கள். தற்போது 'டெண்டிகோ'படத்தை இந்தியில் இயக்குனர் ஹன்சல் மேத்தா ரீமேக் செய்ய உள்ளார். படத்தில் உள்ள காமெடி சீன்ஸ் தன்னை வயிறு குலுங்க சிரிக்க வைத்ததால் இதை ரீமேக் பண்ணபோறதாக அவர் கூறி இருக்கிறார். இணையத் தொடரின் இயக்குநரான ஹன்சல் மேத்தா மற்றும் தயாரிப்பாளர் முகேஷ் சப்ரா ஆகியோர் இணைந்து பெருசு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.






